மல்லிகார்ஜுனேஸ்வரர் திருக்கோவிலில் சனி பிரதோஷம்

தர்மபுரி அருள்மிகு கோட்டை மல்லிகார்ஜுனேஸ்வரர் சுவாமி திருக்கோவிலில் நடந்த சனி பிரதோஷ பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தர்மபுரி நகரப் பகுதியில் அமைந்துள்ள கோட்டை கோவில் மல்லிகார்ஜுன சுவாமி திருக்கோவிலில் சனி பிரதோஷம் நடைபெற்றது. கருவறைக்கு முன்பாக அமைந்த நந்தி ஆண்டவருக்கு 12 வகை பொருட்களைக் கொண்டு பால், தயிர், இளநீர்,பன்னீர், பஞ்சாமிர்தம்,தேன், விபூதி பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்று பிறகு மல்லிகார்ஜுன சுவாமிக்கு சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்று பிறகு உற்சவர் அலங்காரம் செய்து கோவிலை மூன்று முறை சுற்றி வந்தது பெண்கள் கோவிலில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர் சனி பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story