சங்கரன்கோவில் : விநாயகர் வீதி உலா
விநாயகர் வீதி உலா
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் நடந்த விநாயகர் வீதி உலா நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் சங்கரலிங்க சுவாமி முன்பு அமைந்துள்ள விநாயகருக்கு அபிஷேகம் நடைபெற்றது . இதில் விநாயகருக்கு மஞ்சள், பால், இளநீர், சந்தனம், குங்குமம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்களும், அலங்காரங்களும் தீபாரதனையும் நடைபெற்றது. இது தொடர்ந்து விநாயகர் முக்கிய வீதி வழியாக வீதியுலா நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .
Next Story