சங்கராபுரம் : கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

சங்கராபுரம் : கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

தடுப்பூசி முகாம் 

சங்கராபுரம் அடுத்த தியாகராஜபுரம் கிராமத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடந்தது. சங்கராபுரம் அடுத்த தியாகராஜபுரம் கிராமத்தில் கள்ளக்குறிச்சி கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் டாக்டர் கந்தசாமி உத்திரவின் பேரில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் சங்கரன் முகாமை தொடங்கிவைத்தார். சங்கராபுரம் கால்நடை உதவி மருத்துவர் முருகு தலைமையில் 220 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டது.கால்நடை ஆய்வாளர் செந்தில்முருகன்,உதவியாளர் ஜெயலட்சுமி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story