சிவசேனா கட்சி மாநில அமைப்பாளர் பிறந்தநாள்: கோவிலில் சிறப்பு பூஜை

சிவசேனா கட்சி மாநில அமைப்பாளர் பிறந்தநாள்: கோவிலில் சிறப்பு பூஜை

கோவிலில் நடந்த பூஜை

சிவசேனா கட்சி மாநில அமைப்பாளர் பிறந்த நாளையொட்டி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

சிவசேனா கட்சி மாநில அமைப்பாளர் பிறந்தநாள். கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. தமிழக சிவசேனா கட்சியின் மாநில அமைப்பாளராக செயல்பட்டு வருபவர் சி.கே. பாலாஜி. இன்று இவரது பிறந்த நாளை முன்னிட்டு, கரூர் மாவட்டம், புலியூர் அருகே உள்ள எஸ்.வெள்ளாளப்பட்டி கன்னிமார் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் குத்து விளக்கு பூஜை கரூர் மாவட்ட தலைவர் ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்ட செயலாளர் காமராஜ், கரூர் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் முரளி, மாநில வர்த்தக அணி பிரிவு செயலாளர் சக்தி முருகேசன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் கரண், நகர செயலாளர் தர்மராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பிறந்தநாள் விழாவை சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

Tags

Next Story