கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் சிவலிங்கம் சிலை விஜர்சனம்

கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் சிவலிங்கம் சிலை விஜர்சனம்
X
கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் சிலை விசர்ஜனம்
கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் எம்எல்ஏ எம்ஆர் காந்தி தலைமையில் 9 நாட்கள் பூஜை செய்யப்பட்ட சிவலிங்கம் விஜர்சனம் செய்யப்பட்டது.

கன்னியாகுமரி கைலாஷ் ஆசிரமத்தில் இருந்து மகா சிவராத்திரியையொட்டி நாகர்கோவில் தொகுதி எம்.எல்.ஏ.,எம்.ஆர்.காந்தி க்கு சிவலிங்கம் சிலை வழங்கப்பட்டது. அந்த சிலை வீட்டில் வைக்கப்பட்டு கடந்த 9 நாட்கள் காலை மாலை என இரண்டு வேளை பூஜை செய்யப்பட்டது. 10 வது நாளான இன்று கன்னியாகுமரி முக்கடல் சங்கத்தில் சிவ பாடல்கள் பாடி,அட்சதை தூவி பூஜை செய்து சிவலிங்கம் சிலை முக்கடல் சங்கமம் கடலில் எம் ஆர் காந்தி எம்எல் ஏ தலைமையில் விஜர்சனம் செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில் பா.ஜ.மாவட்ட பொருளாளர் முத்துராமன், ஒன்றிய பார்வையாளர் சி.எஸ்.சுபாஷ், தகவல் தொழில்நுட்பம், தரவு மேலாண்மை பிரிவு மாவட்டச் செயலாளர் கிருஷ்ணராஜ், கன்னியாகுமரி பேரூர் தலைவர் ஜெய ஆனந்த் உட்பட பா.ஜ.நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story