தூத்துக்குடியில் சிவன் கோயில் சித்திரை தேரோட்டம்

தேரோட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த அருள்மிகு பாகம்பரியாள் உடனூரை சங்கர ராமேஸ்வரர் ஆலய சித்திரைத் திருவிழா திரு தேரோட்டம் கோலாகலமாக துவக்கம்; நான்கு ரத வீதிகள் வழியாக முன்னதாக விநாயகர் முருகப்பெருமான் எழுந்தருளிய சிறிய தேரும் அடுத்ததாக சுவாமி அம்பாள் எழுந்தருளிய பெரிய தேரும் பவனி வந்தது.
இந்த தேரோட்டத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் வெகு சிறப்பு வாய்ந்தது சித்திரை திருவிழாவாகும் இந்த சித்திரை திருவிழா கடந்த 14 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திரு தேரோட்டம் இன்று காலை 11 மணிக்கு துவங்கியது முன்னதாக விநாயகர் முருகப்பெருமான் எழுந்தருளிய சிறிய தேர் முதலில் அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, மற்றும் பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சுவாமி அம்பாள் எழுந்திருளிய பெரிய தேரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க நான்கு ரத வீதிகள் வழியாக தேர் பவனி வந்தது தேருக்கு முன்பாக தமிழர்களின் பாரம்பரிய கலைகளான சிலம்பாட்டம், வாழ் வீச்சு ,தப்பாட்டம் ,
பறையாட்டம் பொய்க்கால் குதிரை, மயிலாட்டம், கோலாட்டம் போன்றவை சென்றன. இந்த தேரோட்டத் திருவிழாவை முன்னிட்டு நூற்றுக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் மேலும் ஆங்காங்கே பக்தர்களுக்கு நீர்மோர் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
