வீரட்டானேஸ்வர ஆலயத்தில் சிவராத்திரி விழா

வீரட்டானேஸ்வர ஆலயத்தில் சிவராத்திரி விழா

சிவராத்திரி 

கள்ளக்குறிச்சி மாவட்டம், வீரட்டானேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற சிவராத்திரி சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருக்கோவிலுார், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் சிவ பக்தர்களின் ருத்ர ஜபத்துடன் மகா சிவராத்திரி விழா நடந்தது. விழாவையொட்டி, காலை மூலமூர்த்திகளுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. நேற்று முன்தினம் மாலை 4:30 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது.

இரவு 8:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யோகேஸ்வரி சமேத அந்தகாசூர சம்காரமூர்த்தி ஆலய வலம் வந்தனர். 9:00 மணிக்கு இரண்டாம் கால பூஜை, தொடர்ந்து நேற்று அதிகாலை 1:00 மணிக்கு மூன்றாம் கால பூஜை, 3:00 மணிக்கு நான்காம் கால பூஜை என நான்கு கால பூஜைகள் நடந்தது. சிவபக்தர்களால் ஸ்ரீருத்ரம் ஜபம், சிவபுராணம் வாசிக்கப்பட்டது.

ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில் நாதஸ்வர இன்னிசை, திருவருட்பா இசையமுது, பரதநாட்டியம், சிவ பஜனை என இரவு முழுவதும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story