ராசிபுரம் ஸ்ரீ ராமலிங்கேஸ்வரர் சுவாமிக்கு சிவராத்திரி சிறப்பு பூஜை..

ராசிபுரம் ஸ்ரீ ராமலிங்கேஸ்வரர் சுவாமிக்கு சிவராத்திரி சிறப்பு பூஜை..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மேட்டுத்தெரு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் ஆலயத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ ராமலிங்கேஸ்வரர் சுவாமிக்கு சிவராத்திரி விழா விமர்சையாக நடைபெற்றது. முதல் கால யாக பூஜை இரண்டாம் கால யாக பூஜை மூன்றாம் கால யாக பூஜை என பல்வேறு சிறப்பு பூஜைகள் மற்றும் முக்கிய அபிஷேகங்கள் ஆன பால் தையல் மஞ்சள் சந்தனம் தேன் பஞ்சாமிர்தம் இளநீர் பன்னீர் போன்ற பல்வேறு நறுமணமிக்க வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்று பின்னர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து மகா சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

Tags

Next Story