விராலிமலையில் சிவராத்திரி கிரிவலம்
விராலிமலையில் சிவராத்திரி கிரிவலம்
கோலாட்டம் கும்மியாட்டத்துடன் சிவராத்திரி கிரிவலம்
விராலிமலையில் சிவராத்திரியை ஒட்டி சிவ பக்தர்கள் சப்பர தேர் பவனி உடன் சிறுமிகளின் கோலாட்டம் கும்மியாட்டம் ஆடி கிரிவலம் வந்தனர். விராலிமலை வள்ளலார் மடத்திலிருந்து மாலை தொடங்கிய கிரிவல தேர்பவனி விராலிமலை முருகன் மலைக் கோயிலை வளம் வந்து மீண்டும் வள்ளலார் மடத்தில் நிறைவடைந்தது. 63 திருப்பணி அறக்கட்டளை திருமுறை தாமிர சபை சார்பில் நடைபெற்ற சிவராத்திரி கிரிவலம் தேர் பவனிக்கு தாமிர சபை தலைவர் சங்கர் தலைமை வகித்தார். கௌரவ தலைவர் கம்பம் நாராயணசாமி, சமூக ஆர்வலர் பூபாலன், கும்பகோணம் நாகராஜன் காந்தி, முன்னிலையில் தேர்பவனி தொடங்கி வைக்கப்பட்டது. இதில் சிவ பக்தர்கள் கைலாய வாத்தியங்களை இசைத்தே படியும், திருமுறைகளை ஓதிய படியும் சிறுமிகள் கோலாட்டம், கும்மியாட்டம் ஆடி மலையை சுற்றி கிரிவலமாக வந்தனர்.
Next Story