6 மாதத்தில் இடிந்து விழுந்த மழைநீர் கால்வாயால் அதிர்ச்சி

6 மாதத்தில் இடிந்து விழுந்த மழைநீர் கால்வாயால் அதிர்ச்சி
6 மாதத்தில் இடிந்து விழுந்த மழைநீர் கால்வாயால் அதிர்ச்சி
செங்கல்பட்டு மாவட்டம், ஆப்பூர் கிராமத்தில் 6 மாதத்திற்கு முன்கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாயின் தடுப்பு சுவர் இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியம் ஆப்பூர் கிராமத்தில் 800க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த கிராமத்தில் மலைக்கோவில் செல்லும் சாலையில் 2022- - 23ம் ஆண்டு கிராம ஊராட்சி நிதியில் இருந்து, 4.27 லட்சம் ரூபாய் மதிப்பில், கான்கிரீட் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி, கடந்த ஆறு மாதங்களுக்கு முன் நடைபெற்றது.

இந்த பணிகள் முடிந்து ஆறு மாதங்களே ஆன நிலையில், பல இடங்களில் சிமென்ட் சுவர் உடைந்து, மழைநீர் வடிகால்வாயில் விழுந்துள்ளது. இது கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி, மீண்டும் புதிதாக மழைநீர் வடிகால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story