காமராஜர் படத்தின் மீது காலணி விளம்பர போஸ்டர்
சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சிக்குட்பட்ட காந்தி நகர் பகுதியில் நகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 500 க்கும் மேற்பட்ட மீணவ மாணவிகள் படித்து வருகின்றனர். மேலும் பள்ளியின் சுற்றுச்சுவரில் பள்ளி குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் சுற்றுச்சுவரில் சுவரொட்டிகள் விளம்பரங்கள் எழுதாமல் இருப்பதற்காகவும் பள்ளி வளாகத்தில் உள்ள சுற்றுச்சுவரில், தேச தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள் படங்கள், நகராட்சி சார்பில் வரையப்பட்டுள்ளது.
அதில் முன்னாள் முதல்வர் காமராஜரின் படத்தின் மீது தனியார் காலணி விற்பனை செய்யும் கடையின் விளம்பர போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் அங்கு வரையப்பட்டுள்ள கல்வி கண் திறந்த காமராஜர் படத்தை முழுவதும் மறைத்தபடி காலணி கடையின் விளம்பரம் போஸ்டர் ஒட்டி உள்ள சம்பவம் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் சம்பந்தப்பட்ட கடையின் உரிமையாளருக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையும் விடுத்துள்ளனர்.