சோளிங்கர்: திரவுபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
திருக்கல்யாண உற்சவம்
சோளிங்கர் திரௌபதி அம்மன் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே சோமசமுத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு திரவுபதிக்கும் அர்ஜுனனுக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி திரவுபதி, அர்ஜுனனுக்கு நறுமண திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து, பட்டு வஸ்திரம், மலர் மாலை அணிவித்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மணக்கோலத்தில் மணமேடையில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதையடுத்து கலச பூஜை, யாக பூஜை செய்து மங்கள வாத்தியங்கள் முழங்க திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர். கோவில் சார்பில் பக்தர்கள் அனைவருக்கும் திருமண விருந்து வைக்கப்பட்டது.
Next Story