கிளி கூண்டு வாகனத்தில் பக்தோசித பெருமாள் வீதி உலா

கிளி கூண்டு வாகனத்தில் பக்தோசித பெருமாள் வீதி உலா

 பக்தோசித பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் வசந்த உற்சவத்தையொட்டி பெருமாள் கிளி கூண்டு வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ராணிபேட்டை மாவட்டம் சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் 5 நாட்கள் நடைபெறும் வசந்த உற்சவம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு பக்தோசித பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சுவாமிக்கு பால், தயிர், தேன், சந்தனம், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து, மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனைக நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி கிளி கூண்டு வாகனத்தில் வீதி உலா நடந்தது. கொண்ட பாளையம் வசந்த மண்டபத்தில் மங்கள வாத்தியங்கள் முழங்க சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story