ஆம்பூர் அருகே கடையடைப்பு போராட்டம்
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சான்றோர்குப்பம் பகுதியில் பல ஆண்டு காலமாக வண்ணான்துறை பகுதி முதல் பாலாறு வரை செல்லும் கானாறு உள்ளது, இந்நிலையில் இந்த கானாற்றின் அருகே அதிக அளவு ஆக்கிரமிப்புகள் உள்ளதால் மழை காலங்களில் கானாற்றில் அதிக அளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வெள்ளநீரானது குடியிருப்பு பகுதியில் புகுந்து விடுவதாகவும்,
மேலும் கானாறு ஆக்கிரமிப்புகளால் மாயானத்திற்கு செல்ல கூட வழியில்லையெனவும், இதனால் கானாறு ஆக்கிரமிப்புகளை அகற்றகோரி அப்பகுதி மக்கள் பலமுறை ஆம்பூர் வட்டாச்சியர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை பல முறை மனு அளித்தும் அதிகாரிகள் கானாறு ஆக்கிரமிப்புகளை அளவு மட்டுமே எடுத்து செல்வதாகவும்,
அதனை முழுமையாக அகற்ற இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையென கூறி, சான்றோர்குப்பம் பகுதி மக்கள் கானாறு ஆக்கிரமிப்புகளை அகற்றகோரி இன்று 31.12.2023 கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்த நிலையில், பொதுமக்கள் அனைவரும் சான்றோர்குப்பம் மந்தகரை பகுதியில் ஒன்று திரண்ட போது, அங்கு வந்த ஆம்பூர் நகர காவல்துறையினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லையென்று கூறியதால்,
ஆத்திரமடைந்த பொதுமக்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர், பின்னர் சான்றோர்குப்பம் பகுதியில் உள்ள கடைகளை அடைத்து தங்களை எதிர்ப்புகளை தெரிவித்தால் சான்றோர்குப்பம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது..