உசிலம்பட்டியில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்
அடைக்கப்பட்டுள்ள கடைகள்
உசிலம்பட்டி பேருந்து நிலைய விரிவாக்கப்பணிக்காக சந்தைத்திடலில் உள்ள கடைகள் இடிக்கப்படுவதைக் கண்டித்து வர்த்தகர் சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள பேருந்து நிலையம் இடநெறுக்கடி காரணமாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
இதற்கான டெண்டர் அறிவிக்கப்பட்டு தற்போது பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு வருகின்றன.இந்த விரிவாக்கப் பணிக்காக பேருந்து நிலையம் அருகிலுள்ள சந்தைத்திடலில் உள்ள தினசரி சந்தை செயல்படும் சுமார் 140க்கும் மேற்ப்பட்ட கடைகள் இடிக்கப்பட உள்ளன.இக்கடைகள் அரசு சார்பில் கையகப்படுத்துபட்டு உள்ளன.
இந்நிலையில் சந்தைத்திடலில் உள்ள கடைகளை இடிப்பதினால் அதனை நம்பியுள்ள சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும் அதனால் கடைகளை இடிக்காமல் புதிய இடத்தில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் மற்றும் புற வழிச்சாலை அமைக்க வேண்டுமென வியாபாhhஜகள் சங்கத்தினர் தொடர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக இன்று வர்த்தகர் சங்கத்தினர் ஆதரவுடன் ஒரு நாள் கவன ஈர்ப்பு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.இதனால் உசிலம்பட்டி மெயின்பகுதி மற்றும் ஜவுளிக்கடை பஜார் நகைக்கடை பஜார் போன்ற பகுதிகளிலுள்ள சுமார் 5ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட கடைகள் அடைக்கப்பட்டதால் உசிலம்பட்;டி வெறிச்சோடியது.பொதுமக்கள் கடைகளுக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.