வணிகர் தின மாநாட்டையொட்டி சேலத்தில் கடைகள் அடைப்பு

வணிகர் தின மாநாட்டையொட்டி சேலத்தில் கடைகள் அடைப்பு

கடைகள் அடைப்பு

வணிகர் தின மாநாட்டையொட்டி சேலத்தில் கடைகள் அடைக்கபட்டதால், ரூ.25 கோடி அளவிற்கு வர்த்தகம் பாதிப்படைந்தது.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வணிகர் விடுதலை முழக்க மாநாடு நேற்று மதுரையில் நடைபெற்றது. மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 5-ந்தேதி கடைகளுக்கு விடுமுறை என்று வணிகர் சங்கத்தினர் அறிவித்து இருந்தனர். அதன்படி நேற்று சேலம் செவ்வாய்பேட்டை, கடைவீதி, அஸ்தம்பட்டி,

அம்மாபேட்டை, 4 ரோடு, சாரதா கல்லூரி சாலை, சூரமங்கலம் உள்ளிட்ட மாநகரில் உள்ள மளிகைக்கடை, துணிக்கடை, நகைக்கடைகள் உள்ளிட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. அதேபோல் மாவட்டத்தில் உள்ள கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் செவ்வாய்பேட்டை உள்ளிட்ட முக்கிய வர்த்தக இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

இதுகுறித்து சேலம் வணிகர் சங்கத்தினரிடம் கேட்டபோது மாவட்டம் முழுவதும் 25 ஆயிரம் கடைகள் உள்ளது. மாநகர் பகுதியில் மட்டும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. வணிகர் சங்க பேரமைப்பு மாநாட்டையொட்டி நேற்று மாவட்டத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால் இன்று (நேற்று) ஒரு நாள் மட்டும் ரூ.25 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டன என்று கூறினர்.

Tags

Next Story