மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடைகள் வாடகைக்கு

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடைகள் வாடகைக்கு

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் 

மகளிர் சுய உதவிகுழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்ய கடைகள் வாடகைக்கு விடப்படும். விருப்பமுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் விண்ணப்பிக்கலாம்

விருதுநகர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள மகளிர் சுய உதவிகுழுக்களின் உறுப்பினர்களுக்கு தேவையின் அடிப்படையில் தையல், ஆரி ஒர்க்ஸ், எம்ராய்டர் மற்றும் தாங்கள் தயாரிக்கும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களுக்கு பேக்கிங் மற்றும் சந்தை வாய்ப்புகள் ஆகியவை பற்றிய பயிற்சிகள் கொடுக்கப்பட்டு சுழல் நிதி, சமுதாய முதலீட்டு நிதி மற்றும் வங்கி மூலம் தொழில் கடன்கள் கொடுக்கப்பட்டு பல்வேறு வகையான தொழில்கள் செய்து வருகின்றனர்.

இம்மகளிர் சுய உதவிக்குழுக்கள் தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்ய விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகில் புல்லலக் கோட்டை ரோட்டில் அமைந்துள்ள மாவட்ட பூமாலை வணிக வளாகத்தில் உள்ள கடைகள் வாடகைக்கு விடப்படுகிறது. இதில் குழு உறுப்பினராக இருந்தால் மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர், முதியோர் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்கள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் இப்பூமாலை வணிக வளாகத்தில் உணவு பொருட்கள், அலங்கார பொருட்கள், மற்றும் வீட்டு உபயோக பொருட்கள், பழங்கள், காய்கறிகள் மற்றும் பால் விற்பனை செய்யகூடியவர்கள், சிற்றுண்டி தயாரிப்பாளர்கள், சூடான மற்றும் குளிர்பானங்களை விற்பனையாளர்கள், பலசரக்கு விற்பனை மற்றும் பியூட்டி பார்லர், பூ விற்பனை மற்றும் வீட்டு உபயோக பொருட்கள், பழுது நீக்கம் போன்ற தொழில்களில் ஈடுபட்டிருக்கும் பெண்களுக்கும் கடை வாடகைக்கு விடப்படும். பெண்கள் குழுவாக பொருட்கள் உற்பத்தி செய்தால் விற்பனை செய்ய முன்னுரிமை கொடுக்கப்படும். மேலும் தினசரி, மாதம் மற்றும் ஆறு மாத காலம் ஆகியவற்றிக்கு மட்டுமே வாடகைக்கு விடப்படும்.

எனவே விருப்பமுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் பெண்கள் திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிதுறை அலுவலக வளாகம், விருதுநகர் என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story