ராமநாதபுரத்தில் காளை மாடுகள் தட்டுப்பாடு; மாடாய் மாறி பரம்படிக்கும் விவசாயி

ராமநாதபுரத்தில் காளை மாடுகள் தட்டுப்பாடு; மாடாய் மாறி பரம்படிக்கும் விவசாயி

ராமநாதபுரத்தில்காளை மாடுகள் தட்டுப்பாடு; மாடாய் மாறி பரம்படிக்கும் விவசாயி

ராமநாதபுரத்தில் காளை மாடுகள் தட்டுப்பாடு காரணமாக மாடாய் மாறி பரம்படிக்கும் விவசாயிகள்.

காளை மாடுகள் தட்டுப்பாடு காரணமாக மரக்கட்டையில் கயிறு கட்டி விவசாயி ஒருவர் பரம்பு அடித்து வருகிறார்.

ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்கு வைகை அணையில் திறந்து விடப்பட்ட தண்ணீர் கண்மாய்களுக்கு சென்ற நிலையில் நெல் நடவிற்கு வயல்களை தயார் படுத்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். தண்ணீர் நிரப்பி வயல்களை சமன் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

பரம்பு அடித்தல் என்று விவசாயிகள் கூறும் நிலத்தை சமன் செய்யும் பணிக்கு காளை மாடுகள் மற்றும் கலப்பைகளை பயன்படுத்தி வந்தனர். தீவன தட்டுப்பாடு மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக காளை மாடுகள் மற்றும் கலப்பைகள் பயன்பாடு குறைந்துவிட்டது. இதனையடுத்து பரமக்குடி அருகே கீழப்பெருங்கரை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி விஜயகுமார் என்பவர் அவரது நிலத்தில் மரக்கட்டையில் கயிறு கட்டி பரம்படித்து நிலத்தை சமன் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

இது குறித்து விவசாயி விஜயகுமார் கூறுகையில், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயம் செய்து வருகிறேன். தற்போது காளை மாடுகளை யாரும் வளர்க்கவில்லை. இதனால் பரம்பு அடித்தல் பணியில் காளை மாடுகளை ஈடுபடுத்த முடியவில்லை. அதே சமயத்தில் டிராக்டர் கொண்டு பரம்பு அடிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு ரூபாய் 1800 வரை கூடுதல் செலவாகிறது. எனவே நீளமான மரக்கட்டையில் கயிறு கட்டி தானாகவே பரம்பு அடித்து வருகிறேன் இதனால் செலவு குறையும் என கூறினார்.

Tags

Next Story