குடிநீர் பற்றாக்குறை - மக்கள் சாலை மறியல் !

குடிநீர் பற்றாக்குறை - மக்கள் சாலை மறியல் !

குடிநீர் பற்றாக்குறை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் நிலவும் குடிநீர் பற்றாக்குறை பிரச்னை ஆளுங்கட்சியினருக்கு மிகுந்த சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் நிலவும் குடிநீர் பற்றாக்குறை பிரச்னை ஆளுங்கட்சியினருக்கு மிகுந்த சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்தாண்டு பருவமழை முற்றிலும் ஏமாற்றியதால், மாவட்டத்தில் உள்ள 80 சதவீத நீர்நிலைகள் நிரம்பவில்லை.

இதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயர வழியின்றி போனது. கடந்த ஒரு மாதமாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பகல் நேரங்களில் அனல் காற்று வீசுவதால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

ஏரி, கிணறு உள்ளிட்ட நீர்நிலைகள் முற்றிலுமாக வற்றியதால் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்கு சென்று விட்டது. நாளுக்கு நாள் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது.

பல ஊர்களில் குடிநீர் சப்ளை செய்யும் போர்கள் வறண்டதால், மாற்று ஏற்பாடு செய்ய முடியாமல் ஊராட்சி நிர்வாகம் தவித்து வருகிறது.

குடிநீர் கிடைக்காத விரக்தியில், பாதிக்கப்பட்ட கிராமங்களில் மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இது தேர்தல் நேரத்தில் ஆளுங்கட்சியினருக்கு மிகுந்த சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story