குடிநீர் தட்டுப்பாடு பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

குடிநீர் தட்டுப்பாடு பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

சாலை மறியல்

குடிநீர் தட்டுப்பாடு பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
மூங்கில்துறைப்பட்டு அருகே குடிநீர் பிரச்சனையை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மூங்கில்துறைப்பட்டு அடுத்த புத்திராம்பட்டு கிராமத்தில் 3000க்கும் மேற்பட் டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கிணற்றில் இருந்து மின்மோட்டார் மூலம் மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு நீரேற்றம் செய்யப்பட்டு விநி யோகம் செய்யப்படுகிறது. சில நாட்களுக்கு முன் மின் மோட்டார் பழுதானதால் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று அரசு பஸ்சை சிறை பிடித்து காலி குடங்களுடன் சங்கராபுரம் - புதுப்பட்டு சாலையில் காலை 7:30 மணியளவில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த சங்கராபுரம் பி.டி.ஓ., இந்திராணி உள்ளிட்ட அலுவலர்கள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் பழுதடைந்த மின் மோட்டரை சீரமைத்து உடனடியாக குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தையடுத்து 8:30 மணியளவில் கலைந்து சென்றனர்.

Tags

Next Story