நீரின்றி அமையாது உலகு; அமைச்சர் நேரு பேச்சு

நீரின்றி அமையாது உலகு;  அமைச்சர்  நேரு பேச்சு

 முசிறியில் நடைபெற்ற வளர்ச்சி திட்ட பணிகள் துவக்க விழாவில் அமைச்சர் கே.என்.நேரு , மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

முசிறியில் நடைபெற்ற வளர்ச்சி திட்ட பணிகள் துவக்க விழாவில் அமைச்சர் கே.என்.நேரு , மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

திருச்சி மாவட்டம், முசிறியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைந்துள்ளது. மிகப் பழமையான கட்டிடத்தில் இயங்கும் இந்த அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் வேண்டுமென பொதுமக்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை அளித்தனர். இதனையடுத்து தமிழக அரசு 5 கோடியே 36 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து முசிறி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை விழா நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே. என். நேரு தலைமையில் நடைபெற்றது.

திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், முசிறி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன், துறையூர் எம்எல்ஏ ஸ்டாலின் குமார் ஆகியோர் முன்னிலையில் பணிகளை துவக்கி வைத்தார். அப்போது திமுக ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், காட்டுக்குளம் கணேசன், நகர செயலாளர் சிவக்குமார், ஒன்றிய ஆணையர்கள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து தா.பேட்டை ஒன்றியம் எம். புதுப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சிவிலிப்பட்டியில் 13 கிராமங்களுக்கு கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் 7.24 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. பணிகள் முடிவடைந்த நிலையில் நடைபெற்ற துவக்க விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் கே. என். நேரு , ஆட்சியர் பிரதீப் குமார் ஆகியோர் குடிநீர் வழங்கும் பணிகளை துவக்கி வைத்தனர். விழாவில் அமைச்சர் நேரு பேசும்போது தமிழக முதல்வரின் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும் என கூறியிருந்தபடி குடிநீர் திட்டப்பணிகள் செயல்படுத்தப் படுகிறது. இங்கு 7.5 கோடி மதிப்பில் குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 12 கிராம மக்கள் பயன்பெறுவார்கள். குடிநீர் வழங்குவது உயிர் தருவது போன்றது. நீரின்றி அமையாது உலகு என வள்ளுவர் கூறியுள்ளார். அந்த வகையில் குடிநீர் திட்டங்களை பொதுமக்களுக்கு தமிழக அரசு வழங்கி வருகிறது என பேசினார்.

விழாவில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் , முசிறி உதவி நிர்வாக பொறியாளர் நடராஜன், ஒன்றிய செயலாளர்கள் கேகேஆர்.சேகரன், பெரியசாமி, திருஞானம், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆப்பிள் கணேசன், மாவட்டத் துணைச் செயலாளர் மயில்வாகனன், நிர்வாகி பிரபு, மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story