அனுமன் தீர்த்தத்தில் வணிகர் சங்கம் சார்பில் முழு கடை அடைப்பு போராட்டம்

அனுமன் தீர்த்தம் பகுதியில் வணிகர் சங்கம் சார்பில் முழு கடை அடைப்பு போராட்டம் நடந்தது.

அனுமன் தீர்த்தம் பகுதியில் வணிகர் சங்கம் சார்பில் முழு கடை அடைப்பு போராட்டம் அனுமன் தீர்த்தம் பகுதியில் முழு கடையடைப்பு போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு .

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அனுமன் தீர்த்தம் பகுதியில் வெங்கடேஸ்வரா பேக்கரி கடை நடத்தி வரும் செல்வராஜ் என்பவரது கடையில் அனுமன் தீர்த்தம் அருகே உள்ள நாரியம்பட்டி மற்றும் புதுப்பட்டி கிராம பகுதியை சேர்ந்த தீர்த்தகிரி வயது (27) ராமசாமி வயது (30) ஆகிய மூன்று நபர்களும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக மது போதையில் பேக்கரி கடையில் பொருட்களை வாங்கிக் கொண்டு பணம் கேட்டதற்கு கடையில் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி பொருட்களை உடைத்து சென்றுள்ளனர்.

இந்த நிலையில் கடையின் உரிமையாளர் அனைத்து வணிகர்கள் சங்கங்கள் சார்பில் ஊத்தங்கரை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர் நேற்று புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய வலியுறுத்தி அனுமன் தீர்த்தம் பகுதியில் காலை முதல் அனைத்து கடைகளும் வணிகர் சங்கம் சார்பில் முழு நேர கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அனுமன் தீர்த்தம் பகுதியில் பிரசித்தி பெற்ற அனுமந்தீஸ்வரர் ஆலயம் உள்ளது இந்த ஆலயத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லக்கூடிய இந்த பகுதியில் இதுபோன்று வன்முறையில் ஈடுபடும் நபர்களால் தொழில் செய்ய முடியாமல் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி வருவதாகவும் இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் காவல்துறையின் சார்பில் குற்றம் சாட்டப்பட்ட நபரை தேடி வந்த நிலையில் தீர்த்தகிரி (27) ராமசாமி (30) என்ற இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் அனுமன் தீர்த்தம் பகுதியில் முழு கடையடைப்பு போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story