பிச்சாட்டூர் ஏரியில் உபரிநீர் திறப்பு நிறுத்தம்

பிச்சாட்டூர் ஏரியில் உபரிநீர் திறப்பு நிறுத்தம்

பிச்சாட்டூர் ஏரி

ஆரணி ஆற்றின் நடுவே, ஆந்திர மாநிலம், பிச்சாட்டூரில் ஆரணி ஆறு அணைக்கட்டு உள்ளது. இதன் கொள்ளளவு, 1.81 டி.எம்.சி., நீர்மட்டம், 31 அடி. மழைநீர் முக்கிய நீர் ஆதாரம். வடகிழக்குப் பருவமழை மற்றும், 'மிக்ஜாம்' புயல் காரணமாக பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. கடந்த, 4ம் தேதி காலை, 9:00 மணிக்கு வினாடிக்கு, 3,000 கன அடிநீர் மதகுகள் வாயிலாக திறக்கப்பட்டது. பின் படிப்படியாக அதிகரித்து வினாடிக்கு, 17,100 கன அடி வீதம் மழைநீர் வந்தது. இதன் காரணமாக, 16 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டதால், ஆரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. தற்போது மழை நின்றது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 1,000 கன அடி நீர் வருகிறது. தண்ணீர் வெளியேற்றம் நிறுத்தப்பட்டது. ஏரியில் தற்போது, 1.65 டி.எம்.சி., நீர் உள்ளது. நீர்மட்டம், 27.9 அடி. தண்ணீர் நிறைந்து தற்போது கடல் போல் காட்சியளிக்கிறது.

Tags

Next Story