கோடை வெயிலை சமாளிக்க சித்த மருத்துவர் ஆலோசனை
கோடை வெயிலை சமாளிக்க இரு வேளை குளிக்கணும், 3 லிட்டர் தண்ணீர் குடிக்கணும் என சித்த மருத்துவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
கோடை வெயிலை சமாளிக்க இரு வேளை குளிக்கணும், 3 லிட்டர் தண்ணீர் குடிக்கணும் என சித்த மருத்துவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
தமிழகத்தில் நாளுக்கு, நாள் வெயிலின் கடுமை அதிகரித்து வருகிறது. வயது முதிர்ந்தவர்கள் வெயிலின் கடுமையால் அவதிப்படுகின்றனர். வரும் 24 ஆம் தேதி வரை 3 முதல் 5 செல் சியஸ் இயல்பைவிட அதிகமாக வெயில் இருக்கக்கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் இந்த வெயில் தாக்கத்திலிருந்து தப்பிப்பதற்கு எந்த வகையான உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும், எந்த வகையான உடைகள் உடுத்த வேண்டும் என சித்த மருத்துவர் பாலசுப்பிரமணியன் கூறுகையில், தினமும் 3 லிட்டர் முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் அருந்த வேண்டும். நீராகாரம், லெமன் ஜூஸ் அருந்தலாம். வெள்ளரி, தர்பூசணி எடுத்துக் கொள்ளலாம். இளநீர், நுங்கு, நீர் மோர் அதிகம் எடுத்துக் கொள்ளலாம். தினமும் காலை, மாலை இரண்டு முறை குளிக்க வேண்டும். சூட்டை தரக் கூடிய கோழி இறைச்சி உணவைத் தவிர்க்க வேண்டும். நீர் காய்கறிகளான சுரைக்காய், புடலங்காய், சௌசௌவை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். காரமான உணவு, மசாலா உணவைத் தவிர்க்க வேண்டும். தினமும் காலை 11 முதல் மாலை 4 மணி வரை தேவையின்றி வெயிலில் அலைவதை தவிர்க்க வேண்டும். பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். இறுக்கமின்றி, தளர்வாக ஆடைகளை அணிய வேண்டும்" என்றார்.
Next Story