சித்த மருத்துவ தின விழிப்புணர்வு பேரணி

திருச்செங்கோட்டில் சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடந்தது.

சித்த மருத்துவ தினத்தை ஒட்டி தமிழ்நாடு அரசு சித்த மருத்துவ துறை சார்பில் திருச்செங்கோடு ஜேசிஐ டிவைன்,ரோட்டரி இன்னர்வீல் சங்கம்,நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை ஆகியோர் இணைந்து நடத்திய விழிப்புணர்வு பேரணியை நாமக்கல் மாவட்ட திமுக செயலாளரும் மண்ட நகரமைப்பு திட்ட குழு உறுப்பினருமான மதுரா செந்தில், திருச்செங்கோடு நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு, ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.

பேரணியில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் உள்ள சித்த மருத்துவ பிரிவில் இருந்து தொடங்கிய பேரணி வேலூர் ரோடு, மேற்கு ரத வீதி, வடக்கு வீதி, தெற்கு ரத வீதிவழியாகச் சென்று மீண்டும் அரசு மருத்துவமனை அருகே நிறைவடைந்தது பேரனியில் சென்ற மாணவ மாணவிகள் காய்கறிகளின் பலன்கள் மூலிகைகளை உண்பதால் ஏற்படும் பலன்கள் குறித்து கோஷங்கள் எழுப்பியபடி சென்றனர்.பேரணியில் சேலம்& நாமக்கல் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் இராமச்சந்திரன்,திருச்செங்கோடு அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் மோகனபானு,மருத்துவர் செந்தில்குமார் மற்றும் சித்தமருத்துவபிரிவு அலுவலர்கள் ரோட்டரி,இன்னர் வீல்,ஜேசிஐ டிவைன் நம்மதிருச்செங்கோடு அமைப்பினர் அர்த்தநாரீஸ்வரர் கலைக்கல்லூரி மாணவ மாணவியர் நகராட்சி DBC workersகலந்து கொண்டனர் .

Tags

Next Story