முற்றுகை போராட்டம்
கொடியூர் கிராமத்தில் ஆதிதிராவிடர்களுக்கான வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி முற்றுகைப் போராட்டம் நடந்தது.
கொடியூர் கிராமத்தில் ஆதிதிராவிடர்களுக்கான வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி முற்றுகைப் போராட்டம் நடந்தது.
உளுந்தூர்பேட்டை அடுத்த கொடியூர் கிராமத்தில் ஆதிதிராவிடர்களுக்கான வீட்டுமனை பட்டா 210 பேருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பல ஆண்டுகளாக பட்டா வழங்காமல் ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் கிராம மக்களை அலைக்கழித்து வந்தனர். இந்நிலையில் நேற்று மதியம் 3. 45 மணியளவில் உளுந்துார்பேட்டை ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த உளுந்துார்பேட்டை போலீசார் மற்றும் ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் மணிமேகலை ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து மாலை 4:30 மணியளவில் தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Next Story