நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக சார்பில் கையெழுத்து இயக்கம்

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக சார்பில் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது இந்த கையெழுத்து இயக்கத்தை திமுக மருத்துவர் அணியினர் திமுக மாணவர் அணியினர் திமுக இளைஞரணி நடத்தினர் 500க்கும் மேற்பட்டோர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது கையெழுத்துக்களை இட்டு அட்டைகளை உயர்த்திப் பிடித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

ஒவ்வொரு பகுதியிலும் பொதுமக்களிடம் நீட் தேர்வின் விபரீதங்கள் குறித்து எடுத்துக் கூறி கையெழுத்து பெற்று அனுப்ப வேண்டும் என்று நிர்வாகிகள் இடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர் திருச்செங்கோட்டில் அமைச்சர் மதிவேந்தன் மற்றும் மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கையெழுத்துக்களை இட்டு நீட் தேர்வுக்கு எதிராக தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்.

இந்த கையெழுத்து பெற்ற அட்டைகள் வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள இளைஞர் அணியின் இரண்டாவது மாநாட்டில் முதல்வரிடம் ஒப்படைக்கப்படும் அவர் குடியரசு தலைவருக்கு அந்த கையெழுத்துக்களை அனுப்பி வைத்து தமிழகத்தின் கண்டனத்தை பதிவு செய்வார் என்று அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார் இந்த நிகழ்ச்சியில் திமுகவினர் ஏராளமானோர் கலந்துகொண்டு கையெழுத்து இட்டு தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்

Tags

Next Story