சிவகங்கையில் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம்

சிவகங்கையில் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம்

கையெழுத்து இயக்கம்

சிவகங்கையில் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது

சிவகங்கை பேருந்து நிலையப் பகுதியில் அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் சார்பாக 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. சிவகங்கை அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில்,

தொடங்கிய கையெழுத்து இயக்கத்திற்கு மண்டல தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். மண்டல பொதுச்செயலாளர் விஜய சுந்தரம் மற்றும் ரமேஷ் பாபு மண்டல துணை செயலாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், ஆண்ட்ரோபிளிக்ஸ் கார்த்திகேசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிறைவாக சிவகங்கை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த கையெழுத்து இயக்கத்தை ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளர் ஏ. ஜி. ராஜா நிறைவு செய்து வைத்தார். இந்த இயக்கத்தில் ஏ ஐ டி யு சி மாவட்டத் துணைத் தலைவர் சகாயம், ஆட்டோ தொழிற்சங்கத்தின் மாவட்ட துணை செயலாளர் பாண்டி, நகரத் தலைவர் கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு 15 -ஆவது ஊதிய ஒப்பந்தம் பேசி ஊதிய உயர்வு செய்ய வேண்டும்.

ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 104 மாதங்களாக வழங்காமல் இருக்கும் பஞ்சப்படியை உடனடியாக வழங்க வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர் நடத்துனர் எடுப்பதை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து இறந்த தொழிலாளர் களின் வாரிசுகளுக்கு உடனடியாக கல்வித் தகுதியின் அடிப்படையில்,

வேலை வாய்ப்பை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் கடந்த 4 நாட்களாக கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story