நீட் விலக்கு குறித்து திமுக சார்பில் கையெழுத்து இயக்கம்.
பாலக்கோடு அருகே நீட் விலக்கு குறித்து திமுக சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள சோமனஅள்ளியில் பாலக்கோடு கிழக்கு ஒன்றிய திமுக கட்சி அலுவலகம் முன்பு நீட் விலக்கு குறித்து கையெழுத்து இயக்கம் தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி தலைமையில் நடைப்பெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் கே.ஆர்.சி.செல்வராஜ் செய்திருந்தார்.
நிகழ்ச்சிக்கு பாலக்கோடு கிழக்கு ஒன்றிய செயலாளர் கருணாநிதி மாநில சுற்றுசூழல் அணி துனை செயலாளர் முனைவர் ஆர்.பி.செந்தில்குமார், பென்னாகரம் வடக்கு ஒன்றிய செயலாளர் சபரிநாதன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் வெங்கடேஸ்வரன், பேரூர் கழக செயலாளர் சண்முகம், ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் கலந்து கொண்டு பேசிய தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ தடங்கம் சுப்ரமணி நீட் விலக்கு நமது இலக்கு, நீட் விலக்கு பெறுவதற்காக 50 இலட்சம் கையெழுத்துகள் பெற்று அதனை குடியரசு தலைவருக்கு அஞ்சல் மூலம் அனுப்பும் பணி நடைப்பெற்று வருகிறது, நீட் தேர்விலிருந்து விலக்கு பெறும் வரை திமுக தொடர்ந்து போராடும் என பேசினார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு நீட் விலக்கு கடிதத்தில் கையெழுத்திட்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் பொன்மகேஸ்வரன், முன்னாள் ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் ராஜா, மாணவர் அணி துணை அமைப்பாளர் அன்பரசு, மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் பாடி காமராஜ், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர்கள் அர்ஜூனன், கந்தயன், மாவட்ட பிரதிநிதிகள் முத்தப்பன், சண்முகம், பெரிய நஞ்சன், கவுன்சிலர் சங்கர், தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் முனியப்பன், விஷ்ணு, இளைஞர் அணி நிர்வாகிகள் திலிப்குமார், ஆசைதம்பி, பிரபு, அதியமான் மற்றும் கழக நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.