நீட் தேர்தவில் விலக்கு கையெழுத்து: முன்னாள் அமைச்சர் பதில்

நீட் தேர்தவில் விலக்கு கையெழுத்து: முன்னாள் அமைச்சர் பதில்

மரியாதை செய்த முன்னாள் அமைச்சர் 

திமுகவினர் 85 லட்சம் கையெழுத்து பெற்று எப்படி நீட் தேர்தவில் விலக்கு பெறுவார்கள் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் காளிங்கராயன்பாளையம் கொடுமுடி ஆவுடையார் பாறை வரை 56.5 கி.மீ தூரம் காளிங்கராயன் கால்வாய் வெட்டி 743 ஆண்டுகள் நிறைவு பெறுவதை அடுத்து காலிங்கராயன்பாளையத்திலுள்ள அவரது திருவுருவ சிலைக்கு, அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ. செங்கோட்டையன் , கே.வி.ராமலிங்கம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் கே.ஏ. செங்கோட்டையன் , நதிகள் இணைப்பிற்கு முன்னோடியாக நிகழ்ந்த காளிங்கராயனுக்கு அதிமுக ஆட்சியில் மணிமண்டபம் , திருவுருவ சிலை அமைத்தாக தெரிவித்தார்.தொடர்ந்து நீட் தேர்வுக்கு திமுகவினர் 85 லட்ச கையெழுத்து பெற்று விலக்கு பெற நடவடிக்கை குறித்த கேள்விக்கு , மத்திய அரசால் சட்டம் இயற்றப்பட்டு , குடியரசு தலைவரால் ஒப்புதல் பெறப்பட்டு , அமுலிலுள்ள சட்டத்தை 85 லட்சம் கையெழுத்து பெற்று எப்படி நீட் தேர்தவில் விலக்கு பெறுவார்கள் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

Tags

Next Story