நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து இயக்கம்
எஸ்.எம்.மதுரா செந்தில்
நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க.இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மாபெரும் கையெழுத்து இயக்கம் நாளை 21.10.2023 சனிக்கிழமை காலை 9 மணிக்கு திருச்செங்கோடு, சட்டையம்புதூர் செங்குந்தர் திருமண மண்டபத்தில் தொடங்க உள்ளது. இது குறித்து நாமக்கல் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் எஸ்.எம்.மதுரா செந்தில் விடுத்துள்ள அறிக்கையில், பாசிச பா.ஜ.க. அரசு, கடந்த கால அடிமை அ.தி.மு.க. அரசின் உதவியுடன், நம் மாணவர்கள் மீது நீட் தேர்வை திணித்தது. மருத்துவராக வேண்டும் என்ற லட்சியத்துடன் படித்து வந்த நம் மாணவர்களில் 20-க்கும் மேற்பட்டோர் இதனால் தங்களின் உயிரை மாய்த்துக் கொண்டனர். நம் கழக அரசு அமைந்த பிறகு, நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கழக இளைஞர் அணி, மாணவர் அணி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மாபெரும் உண்ணாநிலை அறப்போராட்டத்தையும் நடத்தினோம். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு விலக்கு சட்ட மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் உடனடியாக ஒப்புதல் வழங்க வலியுறுத்தியும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரும் 21-ஆம் தேதி “மாபெரும் கையெழுத்து அறிவுறுத்தலின்படி, ஒன்றிய அரசுக்கு உணர்த்தும் வகையில் "நீட் ஒழிப்பிற்காக பெறப்படும் ஒவ்வொரு கையெழுத்தும், நம் கல்வி உரிமை காப்பதற்கான உயிரெழுத்து" என்பதை உணர்த்த, மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை, வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட இளைஞர் அணி - மாணவர் அணி - மருத்துவ அணி உள்ளிட்ட சார்பு அணி நிர்வாகிகள் அனைவரும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுடன் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.