திருச்செங்கோட்டில் சிலம்ப பொங்கல் நிகழ்ச்சி

சிலம்பம் பொங்கல்
சிலம்ப விளையாட்டில் அதிக நேரம் விளையாட பயிற்சி அளிக்கும் வகையில் சிலம்பச் சுற்று என்னும் போட்டி நடத்தப் பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஆதவன் சிலம்ப விளையாட்டு குழு தலைவர் வெங்கடேஷ் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் பொங்கல் பானைக்கு முன் சிலம்ப விளையாட்டை விளையாடி சிலம்ப கம்புகளுடன் பொங்கல் வைத்து பொங்கலோ பொங்கல் என உற்சாக குலவையிட்டு பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடினார்கள்.
சிலம்ப சுட்று என்ற போட்டியில் சிறு சிலம்பத்தை நெற்றியில் ஊன்றி சிலம்பத்தை 20 முறை சுற்றி நிலையாக நின்று எதிரில் உள்ள இலக்கை சென்றடைகிற மாணவர்களே வெற்றி பெற்றவர்களாக கருதப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது,அதன்படி சிலம்பத்தை சுற்றிய மாணவ மாணவிகள் தலைசுற்றலுடன் மயங்கி விழுந்ததும் தடுமாறியது பார்ப்பவர்களை மகிழ்ச்சி பெற வைத்தது. பின்னர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது
