சிலம்பப் போட்டி

சிலம்பப் போட்டி

பாரம்பரிய சிலம்ப விளையாட்டுப் போட்டியில் நந்தா பிசியோதரபி கல்லூரி மாணவி ஆசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.


பாரம்பரிய சிலம்ப விளையாட்டுப் போட்டியில் நந்தா பிசியோதரபி கல்லூரி மாணவி ஆசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.

ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் உலக சிலம்ப கூட்டமைப்பின் சார்பில் ஆசிய அளவிலான சிலம்பம் தொடர்பான பாரம்பரிய விளை யாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இதில் இந்தியா வின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலம்ப வீரர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தின் சார்பில் ஈரோடு நந்தா பிசியோ தெரபி கல்லூரி மாணவி திருமூர்த்தி காவியா பாரம்பரிய சிலம்புப் பிரிவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்றார். இப்போட்டிகளில் நடைபெற்ற பல்வேறு சுற்றுகளில் வேல் கம்பு, வாள் மற்றும் மான் கொம்பு ஆகிய போட்டிகளில் ஆசிய அளவில் முதலிடம் பெற்றார்.

இதற்கு முன்பு இவர் தேசிய அளவில் நடைபெற்ற பாரம்பரிய சிலம் புப் பரிவில் வெற்றிபெற்று ஆசிய அளவிலான போட்டிகளில் பங் கேற்க தகுதிப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மாணவி திருமூர்த்தி காவி யாவை, ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் செயலர் எஸ்.நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலர் எஸ்.திருமூர்த்தி, முதன் மைக் கல்வி அதிகாரி எஸ்.ஆறுமுகம், முதன்மை நிர்வாக அலுவலர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் கல்லூரி முதல்வர் வி.மணிவண்ணன் ஆகியோர் பாராட்டினர்.

Tags

Next Story