கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழாவின் நிறைவாக சிலம்பாட்ட கம்படி
தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள உப்புக்கோட்டையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியின் நிறைவு நிகழ்ச்சியாக கள்ளர் வேடத்தில் அலங்கரிக்கப்பட்ட கள்ளழகர் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் அதனைத் தொடர்ந்து சிலம்பாட்டம், கம்படியுடன் ஒரு கி. மீ தூர இடைவெளியுள்ள கோயிலுக்கும் மூலஸ்தானத்திற்கும் இடையே கள்ளழகர் மூன்று முறை கொண்டு சென்று வரப்பட்டது. பின் அங்கிருந்து கள்ளர் வேடத்தில் அலங்கரிக்கப்பட்ட கள்ளழகர் சாமியை முல்லைப் பெரியாற்று வழியாக ஸ்ரீ வரதராஜ பெருமாள் மூலஸ்தானம் கோவிலுக்கு கொண்டு சென்று அங்கு பூஜைகள் நடத்தப்பட்டு அங்கிருந்து கள்ளழகர் சாமியை வெள்ளை பாகையுடன் கொண்டு வரப்பட்டது.
இதற்கிடையே கிராமத்தில் உள்ள பொதுமக்கள் இளைஞர்கள் இளம்பெண்கள் அனைவரும் தங்கள் மாமன் மைத்துனர்கள் ஒருவருக்கொருவர் மஞ்சள் நீர் ஊற்றி விழாவை நிறைவு செய்தனர். பின்னர் முல்லைப் பெரியாற்று வழியாக சாமி மூலஸ்தானத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர் அங்கிருந்து கள்ளழகர் சுவாமி கோவிலுக்கு வந்தவுடன் மஞ்சள் நீர் ஊத்தும் விழா முடிவடையும் நிர்வாகிகள் தெரிவித்தனர்