நாகையில் திமுக சார்பில் மவுன ஊர்வலம்
2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி இந்தோனேசியாவில் கடலில் ஏற்பட்ட பூகம்பத்தை அடுத்து தமிழகத்தை சுனாமி காலை 8 40 மணி அளவில் தாக்கியது. இதில் கடற்கரையில் நடை பயிற்சி மேற்கொண்டவர்கள் கடற்கரையில் இருந்த மீனவர்கள் என பத்தாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் இறந்தனர் இதையடுத்து ஆண்டு தோறும் நாகை மாவட்ட திமுக சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
இதையடுத்து நாகை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மறைமலை அடிகளார் சிலையில் இருந்து நாகை மாவட்ட திமுக செயலாளரும் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் என.கௌதமன் தலைமையில் திமுகவினர் மௌனம் ஊர்வலமாக சென்று நாகை கடற்கரையில் நாகை துறைமுகம் அருகே நினைவு ஸ்தூபியில் மலர் வளையம் வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதை தொடர்ந்து கடலில் பாலை ஊற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் க. ராஜேந்திரன், ப. கோவிந்தராஜன்,மாநில மீனவர் அணி துணைச் செயலாளர் ஜி. மனோகரன் மாவட்டக் கழக துணைச் செயலாளர் ஆரூர்மணிவண்ணன் ஒன்றிய கழக செயலாளர் சிக்கல் என் ஆனந்த், கே பழனியப்பன், செல்வ செங்குட்டுவன், சோ.பா. மலர்வண்ணன், என்.சதாசிவம், உதயம் வே முருகையன், மகா குமார், தாமஸ் ஆல்வா எடிசன், நகரக் கழகச் செயலாளர்கள் இரா. மாரிமுத்து, எம். ஆர். செந்தில்குமார், பேரூர் செயலாளர்கள் கா. அட்சயலிங்கம், முகமது சுல்தான் பொதுக்குழு உறுப்பினர்கள் எம். பாண்டியன், கோ.சிவக்குமார், இல.பழனியப்பன் மாவட்ட சார்பு பணி அமைப்பாளர்கள் இரா.முருகையன், அ பாரிபாலன், ஆர். துரைராஜ், எஸ். வி. டி .அருள், வி செந்தில், உதயகுமார், சத்தியமூர்த்தி, தினேஷ், தமயந்தி, சாகுல் ஹமீது ராஜா, குலோத்துங்கன், எஸ் பால்ராஜ், பி.என்.கார்த்தி, சுந்தர், அரவிந்த்,மாவட்ட சார்பு அணி துணை அமைப்பாளர்கள் விமல் மொக்கை, தங்கதுரை, ரவி, சீதா. கருணாநிதி ,கலையரசன், பிரதீப், மற்றும் வெற்றிலைக்கடை சிவா நகர இளைஞர் அணிஆர் எஸ் சத்தியம் உள்ளிட்ட ஏராளமாக