மேட்டூர் அருகே ஜவுளி கடையில் பட்டுப்புடவை திருட்டு

மேட்டூர் அருகே ஜவுளி கடையில் பட்டுப்புடவை திருட்டு

புடவை திருடிய பெண்


மேட்டூர் அருகே நங்கவள்ளியில் சொகுசு காரில் வந்து பட்டுப் புடவைகளை திருடிய ஆந்திராவை சேர்ந்த இரண்டு பெண்கள் கைது.

மேட்டூர் அருகே நங்கவள்ளியை சேர்ந்தவர் சந்திரசேகர் (45). இவர் அப்பாகுதியில் ஜவுளி கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று இவரது கடைக்கு சொகுசு காரில் வந்த 5 பெண்கள் ஜவுளிக்கடையில் இருந்த ஊழியர்களிடம் அதிக விலையுள்ள பட்டுப் புடவைகளை காட்டுமாறு தெரிவித்தனர்.

வெகுநேரமாக புடவைகளை பார்த்து தங்களுக்கு பிடித்தமான புடவைகள் அங்கே இல்லை என அவர்கள் திரும்பி சென்றனர். சந்தேகம் அடைந்த ஊழியர்கள் கடையில் இருந்த சி.சி.டிவி, கேமராவை ஆய்வு செய்து பார்த்தபோது அதில் இரண்டு பெண்கள் பட்டுபுடவைகளை திருடி செல்வது தெரிய வந்தது. இதனை அடுத்து கடை ஊழியர் சத்தம் போடவே அருகில் இருந்தவர்கள் புடவை திருட்டில் ஈடுபட்ட இரண்டு பெண்களை பிடித்தனர்.

அப்போது உடன் வந்தவர்கள் சொகுசு காரில் ஏறி தப்பிச் சென்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நங்கவள்ளி போலீசார் இரண்டு பெண்களையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் ஆந்திராவை சேர்ந்த ரத்தினா (35), புவ லட்சுமி (37). என்பதும் இவர்கள் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பட்டுப் புடவைகளை திருடி விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதனை அடுத்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர். மேலும் தப்பியோடியவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags

Next Story