வெள்ளி வாள், இரட்டை இலை பரிசு

வெள்ளி வாள், இரட்டை இலை பரிசு

கன்னியாகுமரியில் எடப்பாடி பழனிச்சாமிக்கு வெள்ளி வாள், மலர் அலங்காரத்தில் இரட்டைஇலை ஆகியவை அதிமுக சார்பில் பரிசளிக்கப்பட்டது.


கன்னியாகுமரியில் எடப்பாடி பழனிச்சாமிக்கு வெள்ளி வாள், மலர் அலங்காரத்தில் இரட்டைஇலை ஆகியவை அதிமுக சார்பில் பரிசளிக்கப்பட்டது.

குமரி மாவட்டம் நாகர்கோவில் நாகராஜா திடலில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற கட்சியின் பொதுச்செயலாளர் பழனிச்சாமிக்கு நாகர்கோவில் மாநகராட்சி அதிமுக கவுன்சிலர் ஸ்ரீலிஜா தலைமையில் வெள்ளிவாள் பரிசளிக்கப்பட்டது. இதைப்போல் தோவாளையில் மலர் வர்த்தகம் செய்யும் அதிமுக நிர்வாகி்கள், மற்றும் கட்சியினர் ஒன்று சேர்ந்து மலர்களால செய்யப்பட்ட இரட்டை இலை சின்னமும், உயரமான மலர் வாளும் பரிசாக வழங்கினர். இதைப்போல் கன்னியாகுமரி மக்களவை தொகுதி, மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதிக்கான அதிமுகவின் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரத்தை பழனிச்சாமி வெளியிட்டார்.

அதிமுகவை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது. கன்னியாகுமரி தொகுதியில் தற்போது போட்டியிடும் இரு வேட்பாளர்களும் வழக்கமாக பிறகட்சிகள் நிறுத்துவதற்கு மாறாக ஏழை, மற்றும் சிறுபான்மையினர் சமூகத்தை சேர்ந்தவர்களாக நிறு்ததியுள்ளோம். கன்னியாகுமரி மக்களவை தொகுதி வேட்பாளர் பசிலியான் நசரேன் மீனவ சமூகத்தை சேர்ந்தவர். குமரி மாவட்டத்தில் மக்களவை தேர்தலுக்கு மீனவ சமூகதை சேர்ந்தவரை வேட்பாளராக அதிமுக மட்டுமே நிறுத்தியுள்ளது. இதைப்போல் விளவங்கோடு சட்டப்பேரவை வேட்பாளர் ராணி மிகவும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர். இது அதிமுகவால் மட்டுமே முடியும் என தளவாய் சுந்தரம் எம்எல்ஏ. பேசினார். கூட்டத்தில் அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர் பச்சைமால், மற்றும் திரளானோர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story