குடும்ப தகராறில் வெள்ளி தொழிலாளி தற்கொலை

குடும்ப தகராறில் வெள்ளி தொழிலாளி தற்கொலை

தற்கொலை

சேலம் மாவட்டம், அரியாகவுண்டம்பட்டி பகுதியில் குடும்ப தகராற்றில் வெள்ளி வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் சூரமங்கலம் அரியாகவுண்டம்பட்டி சாந்தி நகரை சேர்ந்தவர் நடேசன். இவரது மகன் ராஜா (வயது48). இவர் வெள்ளி வேலை செய்து வந்தார். இவருக்கு குடிபழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று ராஜா மது குடித்ததாக கூறப்படுகிறது. இதனால் மீண்டும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் மனமுடைந்த ராஜா பூச்சி கொல்லி விஷத்தை குடித்து மயங்கினார். அவரை உறவினர்கள் மீட்டு பெங்களூர் பைபாசில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அரியானூர் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ராஜா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் சூரமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story