சிக்கல் சிங்கார வேலவர் கோயில் தைப்பூசத் தெப்பத் திருவிழா
தெப்ப உற்சவம்
நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் நவநீதேஸ்வரர் சுவாமி தேவஸ்தான கோயில் உள்ள சிங்கார வேலவருக்கு (முருகன்) தைப்பூசத் தெப்பத் திருவிழா நேற்று நடை பெற்றது நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் நவ நீதேஸ்வரர் சுவாமி தேவஸ்தான கோயில் உள்ளது.
இக்கோயிலில் உள்ள சிங்கார வேலவர் (முருகன்) சூரனை வதம் செய்ய தனது தாயாரான சிக்கல் வேல் நெடுஞ்கண்ணியிடம் சக்திவேல் வாங்கி திருச்செந்தூரில் சுதனை சம்ஹாரம் (வதம்) செய்யப்பட்டதாக ஐதீகம். அப்படி வேல் நெடுங்கணிணியிடம் வேல் வாங்கும் தீபாபோது சிங்காரவேலவர் மேனியில் வியர்வை சிந்தும் அற்புத நிகழ் காட்சி சிக்கலில் தான் நடைபெறும்.
மிகவும் புகழ்பெற்ற அறுபடை வீடுகளின் இணையான முருகன் திருத்தலமாக உள்ள இந்த சிக்கல் சிங்காரவேலவர் கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு நேற்று காலை சிங்காரவேலவருக்கு (முருகன்) ,சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது அதைத் தொடர்ந்து நேற்று இரவு தெப்ப திருவிழா நடைபெற்றது.
முன்னதாக கோயிலில் இருந்து சிங்காரவேலவர் (முருகன்) வள்ளி தெய்வானையுடன் தங்கப்படி சட்டத்தின் முத்தங்கி அலங்காரத்தில் ஊர்வலமாக புறப்பட்டு கோயில் திருக்குளமான பால் குளத்தில் அமைக்கப்பட்டிருந்த மின் அலங்கார தெப்பத்தில் எழுந்தருளி மங்கள வாத்தியம் முழங்க குளத்தை தெப்பம் மூன்று முறை சுற்றி வந்தது. அப்போது பக்தர்கள் சிக்கல் சிங்கார வேலவருக்கு வேல் வேல் என கோஷமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.
வான வேடிக்கை நடத்தப்பட்டது. தைப்பூச தெப்ப திருவிழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் முருகன், கிராம வாசிகள், உபயதார்கள் செய்திருந்தனர் படவிளக்கம் படம் 3 நாகை . மாவட்டம் சிக்கல் சிங்கார வேலவர் (முருகன்) கோயில் தைப்பூசத் தெப்பத் திருவிழா நேற்று நடைபெற்றது.
மலர் ( முத்தங்கி) அலங்காரத்தில் சிங்காரவேலர் (முருகன்) வள்ளி தெய்வானையுடன் தெய்வத்தில் எழுந்தருளினார் படம் 4நாகை . மாவட்டம் சிக்கல் சிங்கார வேலவர் (முருகன்) கோயில் தைப்பூசத் தெப்பத் திருவிழா நேற்று நடைபெற்றது.