ஒற்றை யானை நடமாட்டம் - பாதுகாப்பாக இருக்க வனத்துறை அறிவுறுத்தல்
கொங்கணப்பள்ளி வனப்பகுதியில் ஒற்றை காட்டு யானை நடமாட்டம் இருப்பதால், யானையை விரட்டும் வரை கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜாகடை வனப்பகுதியில் இருந்து இன்று அதிகாலை ஒற்றைக் காட்டு யானை வேப்பனப்பள்ளி அருகே உள்ள கொங்கணப்பள்ளி வனப்பகுதிக்கு வந்துள்ளது. எனவே வேப்பனப்பள்ளி அருகே உள்ள சிகரமாகணபள்ளி, கே கொத்தூர், கொங்கனபள்ளி, தோட்டக்கணவாய் மற்றும் வனப்பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் ஒற்றை காட்டு யானை முகாமிட்டுள்ளதால் வனப்பகுதி ஒட்டி உள்ள கிராம மக்கள் ஆடு மாடுகளை மேச்சலுக்கு வனப்பகுதிக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் எனவும், இரவு நேரங்களில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் யாரும் தோட்டங்களில் தங்க வேண்டாம் எனவும் வனத்துறையினர் விடுத்துள்ளனர். காட்டு யானையை வனத்துறையினர் விரட்டும் வரை விவசாயிகள் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
Next Story