சிப்காட் விரிவாக்க பணியை ரத்து செய்ய கோரிக்கை

சிப்காட் விரிவாக்க பணியை ரத்து செய்ய கோரிக்கை

வேலுசாமி 

செய்யாறு மேல்மா சிப்காட் விரிவாக்க பணிகளை ரத்து செய்து பாதுகாக்கப்பட்ட விவசாய பகுதியாக அறிவிக்க வேண்டும் விவசாய சங்க மாநில தலைவர் வேலுச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆரணி, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் விவசாய கருத்தரங்கு நிகழ்ச்சியில் பங்கேற்ற உழவர் பெருந்தலைவர் நாராயண சாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் வேலுச்சாமி செய்தியாளர்களிடம் பேசியதாவது: செய்யாறு மேல்மா சிப்காட் விரிவாக்க பணிகளுக்காக விவசாய நிலம் கையகப்படுத்தும் பணி எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டதை கண்டித்தும், ஹைட்ரோ கார்பன் திட்டம் ரத்து செய்யப்பட்டு டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட விவசாய பகுதிகளாக அறிவித்ததை போல மேல்மா சிப்காட் விரிவாக்க பணிகளை ரத்து செய்து பாதுகாக்கப்பட்ட விவசாயபகுதியாக அறிவிக்க வேண்டும் என்றும் மாநில தலைவர் வேலுச்சாமி கூறினார். மேலும் விவசாயிகள் மீது தொடர் அடக்குமுறைகளை மேற்கொள்ளும் திராவிடகட்சிகளை கண்டிப்பதாகவும் எதிர்காலத்தில் விவசாய சங்கங்கள் மாநில கட்சிகளாக உருவெடுத்து ஆட்சியை பிடிக்கும் என்றும், மேல்மா விவசாயிகள் 31 பேர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். இல்லையென்றால் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தார்.

Tags

Next Story