SIR ஐ கண்டித்து மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என் ராஜேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்.
NAMAKKAL KING 24X7 B |11 Nov 2025 6:24 PM ISTஎஸ்.ஐ.ஆர் க்கு எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல்லில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம். திமுக அரசின் திட்டங்களை பெறுவோரை நீக்க திட்டம் - எம்.பி.ராஜேஷ்குமார் பேச்சு
SIR ஐ கண்டித்து திமுக கூட்டணி கட்சியினர் சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதே போல நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் திமுக எம்.பி.ராஜேஷ்குமார் பேசுகையில் பீகார் மாநிலத்தை போல தமிழ்நாட்டிலும் எஸ்.ஐ.ஆர் மூலம் வாக்காளர்களை நீக்க திட்டமிடப்படுகிறன. அதன்படி திமுக அரசின் திட்டங்களை பெறும் 2 கோடி பேரில் 5 அல்லது 10 சதவிகிதம் பேரை எஸ்.ஐ.ஆர் மூலம் நீக்கி விடலாம் என திட்டமிடப்படுகிறது என பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் ஆயிரக்கணக்கனோர் கலந்து கொண்டு எஸ்.ஐ.ஆர் க்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
Next Story



