சிரசு திருவிழா: பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்த எஸ்பி

சிரசு திருவிழா: பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்த எஸ்பி

ஆய்வு செய்த எம்பி

குடியாத்தம் கங்கை அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கள ஆய்வு மேற்கொண்டார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோபாலபுரம் பகுதியில் உள்ள கெங்கை அம்மன் ஆலயத்தில் வரும் மே 14ஆம் தேதி சிரசு திருவிழா நடைபெறுகிறது.முன்னதாக 13ஆம் தேதி தேர் திருவிழா நடைபெறுகிறது.

சிரசு திருவிழாவில் தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா,கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

இதனிடையே குடியாத்தம் சிரசு திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று ஆய்வு மேற்கொண்ட வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் முன்னதாக கோபாலபுரம் பகுதியில் உள்ள கெங்கை அம்மன் ஆலயம் மற்றும் தேர் செல்லும் பாதை சிரசு செல்லும் பாதை உள்ளிட்டவற்றை ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் உடன் இருந்தனர்.

Tags

Next Story