சீர்காழி : சாலையோர பள்ளத்தால் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து.
விபத்துக்குள்ளான அரசு பேருந்து
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்த செங்கமேடில், அரசு பேருந்து, சாலையோரம் உள்ள பள்ளத்தில், கவிழ்ந்து, விபத்துக்குள்ளாகியது. மயிலாடுதுறை மாவட்டத்தில், பல்வேறு பகுதிகளில், புதைவழி மின் வயர்கள், பதிக்கும் பணிகள், நடைபெற்று வருகின்றன. அதற்காக ,சாலையோர பள்ளங்கள், தோண்டி வயர்கள், பதித்த நிலையில், அதற்கான பள்ளங்கள், மூடாமல் உள்ளது. சீர்காழியிலிருந்து மயிலாடுதுறைக்கு சென்ற, அரசு பேருந்து, செங்கமேடு அருகே, எதிரே வந்த, மற்றொரு அரசு பேருந்துக்கு, வழி விட்டுள்ளது. அப்போது சாலையின் ஓரம் இருந்த, பள்ளத்தில், பேருந்தின் இடது புற சக்கரங்கள், சிக்கி சாய்ந்தது. அருகில் இருந்தவர்கள், பேருந்தில் இருந்த அனைவரையும், பத்திரமாக மீட்டனர். இந்த விபத்தில், ஒருவருக்கும் காயம் ஏற்படவில்லை. சீர்காழி காவல்துறையினர், விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர். தீயணைப்பு துறையினர் பேருந்தை பொக்லைன் வாகனத்தை கொண்டு மீட்டனர். பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.