ரூ.1000 வரை ஏலம் போன சிறுமலை பலாப்பழம்

ரூ.1000 வரை ஏலம் போன சிறுமலை பலாப்பழம்

பலாப்பழ விற்பனை 

சிறுமலை செட் மார்க்கெட்டில் தற்போது பலாப்பழ சீசன் களைகட்டியுள்ளது. முதல் நாளிலேயே சிறுமலை பலாப்பழம் ரூ.1000 வரை ஏலம் போனது.
சிறுமலை செட் மார்க்கெட்டில் தற்போது பலாப்பழ சீசன் களைகட்டியுள்ளது. சிறுமலையில் இருந்து கொண்டுவரப்பட்ட பழங்கள் மட்டுமல்லாது, நாட்டு பழங்கள், புதுக்கோட்டை பழங்கள், பண்ருட்டி பழங்கள், கேரளா பழங்கள் என அனைத்து பகுதிகளில் இருந்தும் பலாப்பழங்கள் வரத்து இருந்தது. காலை 6 மணிக்கு வியாபாரிகள் கூட்டம் கூட்டமாக வந்து ஏலத்தில் கலந்து கொண்டனர். முதல் நாளிலேயே சிறுமலை பலாப்பழம் ரூ.1000 வரை ஏலம் போனது.

Tags

Next Story