அக்கா தங்கை மாயம் - அடுத்த நடந்த டுவிஸ்ட்

அக்கா தங்கை மாயம் - அடுத்த நடந்த டுவிஸ்ட்
அக்கா தங்கை மாயம்
அக்கா தங்கை ஒரே நேரத்தில் வீட்டை விட்டு வெளியேறியதுடன் திருமணம் செய்து கொண்டதாக தகவல் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சேலம் அம்மாப்பேட்டையை சேர்ந்தவர் கந்தசாமி. இவருக்கு 5 மகள்கள். இவர்களில் இளைய மகள்கள் 2 பேரை மும்பைக்கு அழைத்து சென்றுவிட்டார். 3 மகள்களை சேலத்தில் உள்ள பெற்றோர் வீட்டில் விட்டிருந்தார். 21 வயதான மூத்த மகள் சேலம் அரசு கலைக் கல்லூரியில் 3ம்ஆண்டு படித்து வருகிறார். 19வயதான 2து மகள் ஐடிஐ படித்து வருகிறார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு, மும்பையில் இருந்து கந்தசாமி மற்றும் மனைவி ஆகியோர் சேலம் வந்தனர். கடந்த 26ம்தேதி சேலத்தில் படித்து வரும் மகள்கள் 2 பேரும் காலையில் கல்லூரிக்கு சென்றனர். மாலையில் இருவரும் வீடு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பாட்டி மற்றும் பெற்றோர் தீவிரமாக தேடினர்.

ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் 27ம்தேதி காலையில், பெற்றோருக்கு செல்போனில் பேசிய அக்கா, தங்கை இருவரும், நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டோம். யாரும் எங்களை தேடவேண்டாம் என கூறி செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டனர். ஆனால் அவர்கள் யாரை திருமணம் செய்து கொண்டனர்? இருவரும் ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டதால் ஒருவரையே திருமணம் செய்து கொண்டார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து அம்மாப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்து, மகள்களை கண்டுபிடித்து தருமாறு பெற்றோர் கூறியுள்ளனர். இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story