கஞ்சா கடத்தல் வழக்கில் தேடப்பட்ட சகோதரிகள் கைது.
வசந்தி, வனிதா
புதுக்கோட்டை மாவட்டம், கோவில்பட்டி மிலிட்டரி காலனியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி வசந்தி ( 56). அதே பகுதியைச் சேர்ந்த நாராயணனின் மனைவி வனிதா (51). அக்காள்,தங்கையான இவர்கள் 2 பேரும் பிரபல கஞ்சா வியாபாரிகள் என்றும், கஞ்சா கும்பலோடு தொடர்புடையவர்கள் மொத்தமாக கஞ்சாவை வாங்கி வந்து, அதனை சமயபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் 110 கிலோ கஞ்சாவை கடத்திய வழக்கில் புதுக்கோட்டை மதுவிலக்கு போலீசார், அவர்கள் 2 பேரையும் தேடி வந்தனர்.
இதற்கிடையே வசந்தியும் வனிதாவும் கடந்த ஒருமாதத் திற்கு முன்பு திருச்சி மாவட் டம், மண்ணச்சநல்லூரில் உள்ள அழகுநகர் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி, ஆந்திரா மற்றும் ஒடிசா உள்ளிட்ட மாநிலங் களில் இருந்து மொத்தமாக கஞ்சாவை வாங்கி மண்ணச்சநல்லூர், நம்பர் 1 டோல்கேட் மற்றும் சமய புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கஞ்சா வியாபாரிகளிடம் விற்றது தெரியவந்தது.
இந்நிலையில் மண்ணச்சநல்லூர் பகுதியில் வனிதா, வசந்தி. தங்கியிருப்பது பற்றி புதுக்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து புதுக்கோட்டை போலீசார் நேற்று மண்ணச்சநல்லூருக்கு வந்தனர், மண்ணச்சநல்லூர் பெண் போலீசார் உதவியுடன் புதுக்கோட்டை போலீசார் வனிதா, வசந்தி இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 4 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.வீடு வாடகைக்கு பிடித்து குடுத்த நபரை போலீசார் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.