மேட்டூர் அனல் மின் நிலையத்தில் உள்ளிருப்பு போராட்டம்.

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் உள்ளிருப்பு போராட்டம்.
X

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்.

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்.
சேலம் மாவட்டம்,மேட்டூர் அணை மின் நிலையத்தில் நிலக்கரி கையாலும் பிரிவில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர் ராஜா (40). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீடியோ ஒன்று சமூக வலை தளங்களில் பதிவிட்டார். அந்த வீடியோவில், அனல் மின் நிலையத்திற்கு சரக்கு ரயிலில் கொண்டு வரும் நிலக்கரி இறக்குமதியின் போது 4 பெட்டிகளில் நிலக்கரி இல்லை. இதில் முறைகேடு நடந்துள்ளது என தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதால், ஊழியர் ராஜாவை 5 நாட்கள் சஸ்பெண்ட் செய்து தனியார் நிறுவனம் உத்தரவிட்டது. தொடர்ந்து, அவர் நேற்று காலை வேலைக்கு பணிக்கு வந்தார். அப்போது, ராஜாவை வேலைக்கு வர வேண்டாம், பணி நீக்கம் செய்து விட்டோம் என தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த நிறுவனத்தில் பணிபுரியம் ஊழியர்கள் அனல்மின் நிலைய வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த அனல் மின் நிலைய அதிகாரிகள் ஒப்பந்த தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பணி நீக்கம் செய்யப்பட்ட ராஜாவை மீண்டும் பணியில் சேர்ப்பதாக தெரிவித்தனர் இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story