கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் சார்பில் உள்ளிருப்பு போராட்டம்
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் சார்பில் தகுதிக்காண் பருவம், கோப்புகளின் கீழ் ஆணை வழங்க வேண்டிய, கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு உண்ணா விரதபோராட்டம் நடைபெற்றது . பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் சார்பில், கிராம நிர்வாக அலுவலர்கள், பிப்ரவரி 19ஆம் தேதி காலை 10மணி முதல் உள்ளிருப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் தங்களுக்கு தகுதிக்கான பருவம் கோப்புகளில் படி பணி ஆணை வழங்காததால் கிராம நிர்வாக அலுவலர்கள்விடுப்பு எடுக்க முடியாமலும், ஊதிய உயர்வு கிடைக்காமல்இருந்து வந்த நிலையில் இதற்கான முன்கட்டை போராட்டங்கள் அறிவித்து நடத்தப்பட்ட நிலையில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த நிலையில் தற்போது ஆறு மாத காலம் ஆகியும் நடவடிக்கை இல்லை என்பதால் இன்று தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தில் சார்பில் மாநில சங்கத்தின் முடிவு படி பெரம்பலூரில் உண்ணாவிரதம் மற்றும் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் பிப்ரவரி 19ஆம் தேதி இன்று, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் ஈடுபட்டது சார் ஆட்சியர் கோகுல் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் உடனடியாக மாலைக்கும் நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்படும் என்று அறிவித்ததை எடுத்து போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.