வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டம்

விபூதி மலை பகுதிக்கு தனியார் ஜீப்கள் செல்ல முதுமலை புலிகள் காப்பக வனத்துறையினர் தடை விதித்ததால் 100-க்கும் மேற்பட்ட ஜீப் ஓட்டுனர்கள் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்க்கு உட்ப்பட் மசினகுடிக்கு வரும் சுற்றுலா பயணிகளை தனியார் ஜீப்களில் மாயார், சிங்காரா மற்றும் பொக்காபுரம் அருகே உள்ள விபூதி மலை பகுதிகளுக்கு அழைத்து சென்று சுற்றி காண்பித்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக விபூதி மலை பகுதிக்கு தனியார் ஜீப்கள் செல்ல முதுமலை புலிகள் காப்பக வனத்துறையினர் அனுமதிக்காமல் தடை விதித்து வருகின்றனர். 3-வது நாளாக இன்றும் அனுமதிக்காததால் 100-க்கும் மேற்பட்ட தனியார் ஜீப் ஓட்டுனர்கள் மசினகுடி வனச்சரக அலுவலகத்திற்கு சென்று முற்றுகையிட்டு 6 மணி நேரத்திற்கு மேலாகா உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் பேசிய வனத்துறை அதிகாரிகள் 2 நாட்களுக்கு அனுமதிக்க முடியாது என தெரிவித்த நிலையில் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Tags

Next Story